
தங்கத்தின் சடுதியான விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரை தாண்டியது.
உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையே இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, நாட்டில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது, மேலும் 24 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை தற்போது 327,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 300,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரத்னராஜா சரவணன் தெரிவித்தார்.