தென்னை மரத்தில் மெய் மறந்து தூங்கிய மாவட்ட அமைப்பாளர்; தேடியவர்களுக்கு திகைப்பு

தென்னை மரத்தில் மெய் மறந்து தூங்கிய மாவட்ட அமைப்பாளர்; தேடியவர்களுக்கு திகைப்பு

களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்று கூறப்படும் பொதுமகன் மீட்கப்பட்டுள்ளார்.

களுத்துறை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அவரை மீட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தென்னை மரத்தில் மெய் மறந்து தூங்கிய மாவட்ட அமைப்பாளர்; தேடியவர்களுக்கு திகைப்பு | People Party District Organizer Fell Coconut Tree

பொருளாதாரப் பிரச்சினை மற்றும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அவர் சுமார் நாற்பது அடி உயரமுள்ள தென்னை மரமொன்றில் ஏறியுள்ளார்.

அதன் பின்னர், அவரது நண்பர்கள் அவரைத் தேடிய நிலையில், அவர் தென்னை மரத்திலேயே, உறங்கிக் கொண்டிருந்தமை தெரியவந்தது.

தொடர்ந்து சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு பிரிவின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னர், அவர் தென்னை மரத்திலிருந்து பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் பயாகல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.