யாழ் பல்கலையில் மீண்டும் மீண்டும் மீட்கப்படும் ஆபத்தான பொருட்கள் ; STF தீவிர சோதனை

யாழ் பல்கலையில் மீண்டும் மீண்டும் மீட்கப்படும் ஆபத்தான பொருட்கள் ; STF தீவிர சோதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.

யாழ் பல்கலையில் மீண்டும் மீண்டும் மீட்கப்படும் ஆபத்தான பொருட்கள் ; STF தீவிர சோதனை | Dangerous Items Repeatedly Found At Jaffna Uni

இதையடுத்துப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறித்த பொருட்களைப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இன்று காலை அகற்றினர்.

யாழ் பல்கலையில் மீண்டும் மீண்டும் மீட்கப்படும் ஆபத்தான பொருட்கள் ; STF தீவிர சோதனை | Dangerous Items Repeatedly Found At Jaffna Uni

பின்னர் மீண்டும் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.