யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரத்தில் கதறும் குடும்பம்

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரத்தில் கதறும் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார்.

அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரத்தில் கதறும் குடும்பம் | Family Man Death In Jaffna

இது குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த நபர் நேற்று (15) தாவடிப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேலை செய்தபோது தவறி முதல் மாடியில் விழுந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி  மேற்கொண்டார்.