யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்

யாழில் காசநோய் காரணமாக இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொட்டன் வீதி, மாவிட்டபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த தயாளன் ருத்ரா (வயது 22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த யுவதி நேற்றையதினம் பிற்பகல் மூச்செடுக்கு சிரமப்பட்ட நிலையில் மயக்கமுற்றுள்ளார்.

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம் | Girl Died After Struggling To Breathe In Jaffna

பின்னர் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீது இன்றையதினம் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காசநோய் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யுவதியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.