16 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு ; தீவிரமாகும் விசாரணை
மஸ்கெலியா பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட எமலீனா பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்நத 16 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன் தூக்கிட்டு உயிர்மாய்க்க முயன்றுள்ளார். பின்னர் சிறுவனை மீட்ட உறவினர்கள் உடனடியாக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் நேற்று சிறுவனின் உடற்கூற்று பரிசோதனை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றது.