25 தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க திட்டம் : வெளியான அறிவிப்பு
நாடு முழுவதும் 25 தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவீனமயமாக்கல் திட்டங்கள் தொழில் பயிற்சியை மேம்படுத்துவதில் மட்டுமன்றி, இளைஞர் சமூகத்தின் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நலனை ஆதரிப்பதிலும் கவனம் செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய வளர்ச்சிக்குத் தேவையான மனித வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, 23 தொழில்நுட்பக் கல்லூரிகளில் அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கட்டுமான மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு முப்படைகளிடமிருந்து தொழிலாளர் ஆதரவைப் பெறுவதற்கான நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.