தனியார் பாடசாலை ஒன்றில் 16 மாணவர்களுக்கு ஒவ்வாமை!

தனியார் பாடசாலை ஒன்றில் 16 மாணவர்களுக்கு ஒவ்வாமை!

  எல்பிட்டி பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வியாழக்கிழமை (26) அன்று எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு மற்றும் தடிப்பு காரணமாகவே மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தனியார் பாடசாலை ஒன்றில் 16 மாணவர்களுக்கு ஒவ்வாமை! | 16 Private School Students Have Allergies Hospital

குறித்த பாடசாலையின் ஒரே மண்டபத்தில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு ஒவ்வாமைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ஏதேனும் பூச்சிகள் கடித்தமையினால் அல்லது விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் பட்டமையினால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.