மத்திய கிழக்கில் போர் பதற்றம்; எட்டாத உயரத்தில் தங்க விலை!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (02) பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,363 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்வைக் கண்டுள்ளது.
ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 94.89 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் காரணமாக, இன்று உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் , ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.