அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய நடைமுறை 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நேற்று (01) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

கொழும்பு Port City கடலில் யாழ். இளைஞரின் சடலம் மீட்பு

கொழும்பு Port City கடலில் யாழ். இளைஞரின் சடலம் மீட்பு

 

 

 

வெளியிடப்பட்ட சுற்றுநிருபம்  

இதற்கான சுற்றுநிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டாரவினால் (Aloka Bandara) வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் நலன் கருதியும் பொருளாதார சூழல் மற்றும் கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர், அரச ஊழியர்கள் அதிகபட்சமாக 30 இலட்சம் ரூபாய் வரை வீடு மற்றும் சொத்து கடன்களை பெறக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.