மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை மீண்டும் உயர்வு!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்றையதினம்(5.3.2026) WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.86 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.59 அமெரிக்கடொலராக நிலவுகிறது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விலை 3.003 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.