பாடசாலையொன்றில் திடீரென நேர்ந்த விபரீதம் - ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலையொன்றில் திடீரென நேர்ந்த விபரீதம் - ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள் கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலையொன்றில் திடீரென நேர்ந்த விபரீதம் - ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் | Accident At Baththegama School

பாடசாலையில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்