நாளை மறுநாள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடக்கம்?
முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த, புதிதாக அமைந்துள்ள தவெக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல் படைத்திட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த மே 9ம் தேதி தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.
மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2 முறை தொடக்க நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில் வரும் 9ம் தேதி திட்டம் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வரும 9ம் தேதி தொடக்க நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.