மு.க.ஸ்டாலினைப் பார்த்தால் கோபம் வரவில்லை, பரிதாபமாக இருக்கிறது..!- அமைச்சர் அருண்ராஜ்

மு.க.ஸ்டாலினைப் பார்த்தால் கோபம் வரவில்லை, பரிதாபமாக இருக்கிறது..!- அமைச்சர் அருண்ராஜ்

கட்சி நிதி வாங்கவில்லை என திமுகவால் தைரியமாக கூற முடியுமா?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:

வாழும் எம்ஜிஆர் விஜய் தலைமையிலான கட்சியில் தான் அதிமுகவினர் இணைந்துள்ளனர். இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்த்தால் காசு கொடுத்து கூடிய கூட்டமாகவா தோன்றுகிறது?

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது மக்களுக்கு துரோகம் செய்வது அல்ல. அதிமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள் திமுக எதிர்ப்பால் ஓட்டு போட்டவர்கள். திமுகவுடன் இணைய அதிமுக முயற்சித்ததே மக்களுக்கு செய்த துரோகம். தற்போது தேர்தல் வைத்தால் தவெகவுக்கு 60% ஓட்டுகள் விழும்.

கட்சி நிதி வாங்கவில்லை என திமுகவால் தைரியமாக கூற முடியுமா? CM விஜய் யாரையும் ஊழல் செய்ய விடமாட்டார்.

சட்டமன்றத்தில் பெரிய பிரச்னை செய்தார் உதயநிதி.. தலைவர் கேட்டது ஒரே கேள்வி தான்.. சட்டமன்றமே அதிர்ந்தது.. "பார்ட்டி ஃபண்ட்"..

இதை கேட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று உதயநிதி கேள்வி எழுப்பினார்.. ஆதாரம் இருக்கு என்று எல்லோருக்கும் தெரியும்..

ஊடகங்களுக்கு, மக்களுக்கு, வாக்களித்த அனைவருக்கும் தெரியும்.. உங்களுக்கு திராணி, தைரியம் இருந்தால், நாங்கள் பார்ட்டி ஃபண்ட் வாங்குவது இல்லை என்று சொல்லுங்கள்.. மக்கள் அதற்கு தீர்ப்பு வழங்குவார்கள்..

இன்னும் 3 மாதத்தில் ஆட்சி கவிழும் எனக்கூறும் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது ஏமாந்தார். 

ஸ்டாலின் அய்யா ஆட்சியில் இருந்த போதும் சுற்றி இருந்த 4 பேர் அவரை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள். அதை நம்பி தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி கொடுப்பதாக அவரே நம்பிக்கொண்டிருந்தார். 

இப்போதும் அதே 4 பேர் தவெக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக அவரை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரைப் பார்த்தால் கோபம் வரவில்லை பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.