உலக சாதனை படைத்த டைனோசர் எலும்புக்கூடு: கோடிகளை தொட்ட ஏல விற்பனை

உலக சாதனை படைத்த டைனோசர் எலும்புக்கூடு: கோடிகளை தொட்ட ஏல விற்பனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஏலத்தில், சுமார் 6 கோடியே 70 லட்சம் ஆண்டுகள் பழமையான டைரானோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus Rex) வகை டைனோசரின் எலும்புக்கூடு இந்திய மதிப்பில் ரூ.482 கோடியே 11 லட்சத்திற்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

பிரபல ஏல நிறுவனமான Sotheby's நடத்திய இந்த ஏலத்தில், கிரெட்டேசியஸ் (Cretaceous) காலத்தைச் சேர்ந்த சுமார் 38 அடி உயரமுள்ள ராட்சத டி-ரெக்ஸ் டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு காட்சிப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் சுமார் ரூ.413 கோடி மதிப்பில் ஏலம் தொடங்கப்பட்ட நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர்.

 

413 கோடி மதிப்புடைய டைனோசர் எலும்புக்கூடு

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தின் இறுதியில்,  டி-ரெக்ஸ் எலும்புக்கூடு ரூ.482 கோடியே 11 லட்சத்திற்கு விற்பனையாகி புதிய சாதனையைப் பதிவு செய்தது.

உலக சாதனை படைத்த டைனோசர் எலும்புக்கூடு: கோடிகளை தொட்ட ஏல விற்பனை | 67 Million Year Old T Rex Skeleton Sells 482 Crore

இதற்கு முன்னர், இதே ஏல (Sotheby's) நிறுவனம் 2024ஆம் ஆண்டு ஸ்டெகோசரஸ் (Stegosaurus) வகை டைனோசரின் எலும்புக்கூட்டை ரூ.425 கோடிக்கு ஏலம் விட்டிருந்தது.

அந்த சாதனையையும் முறியடித்து தற்போது டி-ரெக்ஸ் எலும்புக்கூடு ஏலம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.