கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
நீர்வெட்டு
இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.