முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்சவை இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

 

முன்னாள் விமானப்படைத் தளபதி

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக நேற்று (10) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை | Ex President Gotabaya Rajapaksa Arrives At Fcid

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.