லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

மாதாந்த விலை திருத்தத்துக்கு அமைய ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாயாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

 

விற்பனை விலை 

அத்துடன் 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,750 ரூபாயாக தொடர்ந்தும் விற்கப்படும்.

மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 815 ரூபாயாகவும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.