இன்றைய ராசி பலன் 8 அக்டோபர் 2026
மேஷம் ராசி பலன்
![]()
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பாராத சில உதவிகள் உங்களைத் தேடி வரும். விலையில் இருந்த பொருட்கள் வாங்குவது அல்லது திட்டமிடாத நிலையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்ய நினைப்பீர்கள். அதே சமயம் ரகசியம் போன்ற நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் சூழலை உணர்ந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான உங்களுடைய திட்டங்கள் மற்றும் சிந்தனை அதிகரிக்கும். வேலை தொடர்பாக மேலதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
ரிஷபம் ராசி பலன்
![]()
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் சார்ந்த புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். கல்வி தொடர்பாக சாதகமான சூழல் நிலவும்.இன்று வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வேலையை விட சொந்த தொழிலை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலையை தொடங்குவது அல்லது ஒப்பந்தங்கள் பெறுவது தொடர்பாக சில சிக்கல் ஏற்பட்டு நீங்கும். முதலீடு விஷயங்களில் கவனம் தேவை.
மிதுனம் ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சகோதரர்களிடமிருந்து இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் குறையும். இன்று உங்கள் பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடர்பாக இருந்த மறைமுக போட்டிகள் குறையும். உங்களுடைய குடும்பம் அல்லது பணியிடத்தில் இருக்கக்கூடிய போட்டி பொறாமைகள் குறையும். உங்களுடைய சிந்தனை மிக்க செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். இன்று உங்களுடைய படிப்பு தொடர்பாக மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
கடகம் ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வெளியூர், வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்கள்மூலம் உங்களுக்கு அனுகூல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள், கவலைகள் நீங்க கூடியதாக இருக்கும். மேலும் கடுமையான வேலைகளை உங்களுடைய சிந்தனையால் முடிக்க முடியும். தன வரவு அதிகரிக்க கூடிய நாள். கல்வி தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டத்துடன் செயல்படுவீர்கள். இன்று யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக செயல்படவும். இன்று வியாபாரம் தொடர்ப தொடர்பாக வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதுமையான செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆதாயங்கள் பெறுவது தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். குறிப்பாக அரசு தொடர்பான பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். உங்களுடைய குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் தீர்க்க முடியும். பணியிடத்தில் வேலைகளை முடிப்பதில் அலட்சியம் இன்றி செயல்படவும். திருமணம் தொடர்பாக இருக்கக்கூடிய முயற்சிகளில் நல்ல செய்திகள் தேடி வரும். இன்று உங்கள் சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். பயணங்கள் நல்ல அனுபவத்தை தரக்கூடியதாக அமையும்.இன்று நீங்கள் எதிர்பார்த்த வரவு கிடைப்பதில் இழுபறியாக இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்களுடைய தொழில், தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். ஆலோசனைக் கூட்டத்தில் பயனற்ற கருத்துக்கள் தவிர்க்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் உங்களுடைய தடைகளை தாண்டி வெற்றி பெற முடியும். உங்களுடைய வேலை, தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய ஆரோக்கியம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். அதே சமயம் உங்களுடைய உணவு விஷயங்களில் கவனம் தேவை.இன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
விருச்சிகம் ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, குடும்பம் தொடர்பாக இருந்த மன கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற பாடுபடுவீர்கள். சமூகப் பணிகளில் இன்று ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இது உங்களுடைய மதிப்பும், மரியாதையையும் உயர்த்தும். தனவரவு அதிகரிக்கக் கூடிய நாள். வேலை தொடர்பாக மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். உங்களுடைய தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உண்டு. இழுபறியான சூழ்நிலை மறையும்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பாக முடங்கிக் கடந்த சில திட்டங்கள் அல்லது வேலைகளை இன்று தொடங்கினால் முடிக்க முடியும். நண்பர்கள் வழியில் உங்களுக்கு ஆதரவும், ஆலோசனையும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் மன வருத்தம், கருத்து வேறுபாடுகள் விலகும். இன்று உடல் நலனில் இருக்கும் தொந்தரவுகள் நீங்கலாம். மனதை உறுத்திய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இன்று நிலைமை படிப்படியாக மாறும்.
மகரம் ராசி பலன்
![]()
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் புதிய சிந்தனை நல்ல பலன் தரும் என்பதால், மனதில் இனம் புரியான சந்தோஷம் ஏற்படும். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற சிறிது சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் சேமிப்பு குறையலாம். உங்களின் பயணங்கள் மூலம் அனுகூல பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனமாக இருக்கவும். வேலை தொடர்பாக சக ஊழியர்களிடம் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும்.
கும்பம் ராசி பலன்
![]()
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடியதாக இருக்கும். இன்று உபரி வருமானம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரலாம். உங்களுடைய தொழில், வியாபாரம் தொடர்பாக சந்தைப்படுத்தும் முயற்சிகள் முன்னேற்றமடையும். இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் செலவு செய்வதில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று உங்களுக்கு மறதி சார்ந்த பிரச்சினைகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. சில எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். இன்று சமூகத்திலும் பணியிடத்திலும் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும்.போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி பெற முடியும். வெளியூர், வெளிநாடு தொடர்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வியாபாரம் தொடர்பாக சில நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மனதில் உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.