இன்றைய ராசி பலன் 11 அக்டோபர் 2026 : நவராத்திரி முதல் நாள் ராசி பலன்
இன்று 11 அக்டோபர் 2026, புரட்டாசி 24 ஞாயிறுக் கிழமை, பிரதமை திதி, இன்று சந்திர பகவான் துலாம் ராசியின் சித்திரை பின் சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் மீன ராசியை சேர்ந்த பூரட்டாதி பின் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று துலாம் ராசியில் சுக்ரன், புதன், சந்திரன் கிரக நிலையின் அடிப்படையில் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம். இன்று நவராத்திரி ஆரம்பம்.
மேஷம் ராசி பலன்
![]()
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஒரு நண்பரின் உதவியால் உங்களுடைய பண வரவு அதிகரிக்கலாம். வீடியோ அல்லது சொத்து தொடர்பான வசதிகள் மேம்படும். வேலை மாற்றம் யோசிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று மிகவும் ஆற்றலுடன் உணர்வீர்கள். நிதிநிலைமை வழக்கம் போல் சீராக இருக்கும். உங்களுடைய திட்டமிட்ட பயணங்கள் இடையூறு இன்று நடக்கும். இன்று ஒப்பந்தங்கள் தொடர்பாக அவசரப்பட வேண்டாம்.
ரிஷபம் ராசி பலன்
![]()
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் நலம் முன்னேற்றம் அடையக்கூடிய நாள். ஆற்றலுடன் உணர்வீர்கள். உங்களுடைய பணிகளை சிறப்பாக முடிக்கவும், அதன் மூலம் பாராட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் அல்லது வேலை தொடர்பாக திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டு. இது சக ஊழியர்களை கவரும். குழந்தைகள் விஷயத்தில் அன்பாக இருக்கவும். சொத்து வாங்குவது தொடர்பான திட்டங்களை இன்று தவிர்ப்பது நல்லது. பயணத்திட்டங்கள் சுமூகமாக அமையும். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம் ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலைமை அதிகரிக்கக் கூடிய நாள். பொதுவாக செயல்படுவதன் மூலம் நன்மை அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணை மீது காதல் அதிகரிக்கும். உங்களுடைய பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆன்மீகத்தின் மீது நாட்டமும் அது தொடர்பான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். வேலை, தொழில் சூழல் சிறப்பாக அமையும். கடின உழைப்பும், நேரத்தை சரியாக பயன்படுத்துவதும் உங்கள் வெற்றியை மேம்படுத்தவும். குடும்பத்தினருடன் உறவு வலுவடையும். சொத்து விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதிநிலை ஸ்திர தன்மையுடன் இருக்கும். சுதந்திரமாக உணருவீர்கள். உங்களுடைய ஆற்றலும், ஊக்கமும் அதிகரிக்கும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் மனதிற்கு இதமான தருணங்களை அனுபவிப்பீர்கள். இன்று முடிந்தவரை பயணங்கள் செல்வதை தவிர்க்கவும். சொத்துக்கள் வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக லாபகரமாக அமையும். உங்களுடைய நிதி நிலை அதிகரிப்பது நிம்மதியை தரும். நீண்ட கால நோயிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அறிமுகம் இல்லாத ஒருவரின் ஆலோசனை, அல்லது அவரின் அறிவுறுத்தலின்படி முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
சிம்மம் ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த நாள். பணியிட விவகாரம் தொடர்பாக தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இன்று வேலை தொடர்பாக ஓய்வு கிடைக்கவும், நண்பர்களுடன் நேரம் செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும். காதல் தொடர்பாக சிலருக்கு உதவுவீர்கள். இன்று தேவையற்ற வேலைகளால் நேரம் வீணாகலாம். உங்கள் பணிகளில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். குடும்ப உறவுகளில் அமைதியையும், மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது தொடர்பாக லாபம் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை தொடர்பான திறமையை வெளிப்படக்கூடிய நாள். குடும்ப உறவுகள் ஆதரவாக இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். ஆரோக்கியமும் மேம்படவும், சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள். இன்று நிதி திட்டங்களை உருவாக்கி, எதிர்கால ஸ்தித்தன்மையை வலுப்படுத்த வேண்டிய நாள். இன்று வேலை தொடர்பாக சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சொத்து தொடர்பான ஒப்பந்தங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பண வரவு அதிகரிக்க கூடிய நாள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை துணையின் ஆதரவும் அன்பும் கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனையும், மன நலனையும் மேம்படுத்த யோகா மற்றும் தியானம் செய்யவும்.. நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இன்றைய தினம் ஒரு நிகழ்ச்சி அல்லது விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். முக்கிய வேலைகளை நாளைக்கு ஒத்திவைப்பதை தவிர்க்கவும். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு கூட்டு முயற்சிகள் நல்ல வாய்ப்பை கொண்டு வரும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா அல்லது பயண திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் உதவும் மனப்பான்மை பலர் பாராட்டுவார்கள்.
விருச்சிகம் ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழில் உங்களுக்கு மன நிறைவை தரும். நிதிநிலை சாதகமானதாகவும், நிலையானதாகவும் இருக்கும். சொத்து தொடர்பான புதிய ஒப்பந்தங்களை தெரிவிக்கவும். முடிவு எடுக்கும் விஷயத்தில் கவனம் தேவை. கடினமான விஷயங்களில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள உகந்த நாள். சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக அமையும். உறவுகள் மேம்படும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும் இன்று உங்களுடைய வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தன்னம்பிக்கையும், ஆற்றலும் அதிகரிக்கும். தொழில் ரீதியான சாதகமான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், காதலும் நிறைந்திருக்கும். கடினமான சூழ்நிலையை உங்கள் துணை என் ஆதரவாக குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். காதல் விவகாரங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் ரீதியாக சாதகமான நாள். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணிகளை மகிழ்ச்சியாக செய்து முடிப்பவர்கள். இன்று வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
மகரம் ராசி பலன்
![]()
மகர ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு பிடித்த வேலையை செய்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய உடற்பயிற்சி முறைகளை தொடங்க, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று முக்கியமான சில நபர்களுடன் பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். வளமான எதிர்காலத்திற்கான முதலீடுகளில் ஈடுபடுவீர்கள்.
கும்பம் ராசி பலன்
![]()
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று புதிய உடற்பயிற்சி முறையை தொடங்குவதற்கு ஏற்ற நாள். புதிய வேலைக்கான மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று நீங்கள் வீட்டில் செய்யக் கூடிய உதவிகள் பெரிதும் பாராட்டப்படும். முக்கிய நபர்களுடன் தொடர்பு மேம்படும். குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு சில முயற்சிகளில் வெற்றியை தரும்.
மீனம் ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்கால பாதுகாப்பிற்கான சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்க முடியும். இன்று உங்களுடைய பயணத் திட்டங்கள் தடையின்றி சுமூகமாக நடக்கும். ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவீர்கள். இன்று சொத்து விற்பது தொடர்பான விஷயங்களை தவிர்க்கவும். உங்கள் பணிகளில் தலைமை பண்பு அதிகரிக்கும். நிதிநிலை ரீதியாக ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலை தொடர்பாக மேலதிகார்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.