நவராத்திரி 2026: துர்கா தேவியின் அருளைப் பெற 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
ஜோதிடத்திலும், ஆன்மீகத்திலும் நவராத்திரி பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. நவராத்திரி பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில், உங்கள் ராசிக்கு ஏற்ற மங்களகரமான நிறத்தில் ஆடை அணிவதும், துர்கா தேவியை சிறப்பு வழிபாடு செய்வதும் நற்பலன்கள் தரும். இது குறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
![]()
இந்து சமயத்தில் மிகவும் மங்களகரமானதாகவும், நீண்ட நாட்கள் கொண்டாடப்பட கூடிய ஒரு பண்டிகை நவராத்திரி. இந்த நாட்களில் துர்க்கை அம்மனை பக்தியுடன் வழிபடுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களும் துர்கா தேவியை எப்படி வழிபட வேண்டும், அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம், அமைதி மற்றும் நேர்மறையான உற்சாகத்தை பெறலாம்.
மேஷ ராசி
![]()
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, துர்கா தேவையை வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் துர்க்கை அம்மனுக்கு லட்டு அல்லது சிவப்பு நிறத்திலான பதார்த்தங்களை படைத்து வழிபாடு செய்யவும். இதன் மூலம் துர்கா தேவியின் அருள் கிடைக்கும் உங்களுடைய தன்னம்பிக்கையும், நேர்மறையான எண்ணங்களும் அதிகரிக்கும்.
ரிஷப ராசி
![]()
ரிஷப ராசி சேர்ந்தவர்கள் வெள்ளை மற்றும் பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடையை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, துர்கா தேவி வழிபாடு செய்வதும், தாமரை விதைகள் அல்லது ஜவ்வரிசி பாயாசம் போன்றவற்றை தேவிக்கு நெய்வேத்தியமாக வைத்து படைப்பதும், அதனை குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் விநியோகிக்கவும்.
மிதுன ராசி
![]()
மிதுன ராசி அன்பர்கள் நவராத்திரி அற்புத நாளில் பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிறங்கள் நிறைந்த ஆடைகளை அணிந்து துர்கா தேவியை வழிபட மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஏலக்காய் அல்லது முந்திரிப் பருப்பு நிறைந்த பதார்த்தத்தை தேவிக்கு நெய்வேத்தியமாக படைத்த வழிபாடு செய்யவும். இதன் மூலம் உங்களுடைய அறிவு திறன் அதிகரிக்கும். கவனத்தில் குறையும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
கடக ராசி
![]()
கடக ராசி சேர்ந்தவர்கள் வெள்ளை அல்லது பிரகாசமான நிறத்தில் உள்ள ஆடைகளை அணிவது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. நவராத்திரி காலத்தில் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து துர்கா தேவி வழிபாடு செய்யவும். மேலும் நவராத்திரி தினத்தில் வெள்ளை நிற பதார்த்தங்கள், பால் சார்ந்த இனிப்பு வகைகள் தெரிவிக்க படைத்து பக்தியுடன் வழிபாடு செய்யவும். இதன் மூலம் கவலைகள் மற்றும் வீட்டில் உள்ள சச்சரவுகள் நீங்க அமைதி கிடைக்கும்.
சிம்ம ராசி
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு நவராத்திரி காலத்தில் நீங்கள் சிவப்பு, ஊதா மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் துர்க்கை அம்மனுக்கு மாதுளை அல்லது குங்குமப்பூ கலந்த பாயாசத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யவும். துர்க்கை அம்மனின் வழிபாடு மற்றும் அருள் காரணமாக உங்களுடைய தைரியமும், ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி ராசி
![]()
கன்னி ராசிம் சேர்ந்த நண்பர்களுக்கு, இந்த நவராத்திரி பண்டிகையின் போது பச்சை நிற ஆடைகளை அணிவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் பச்சை நிற ஆடைகளை அணிந்து துர்கா தேவியை வழிபடுவதும், அம்மனுக்கு பச்சைப் பயிறு நெய்வேத்தியமாக பணித்த வழிபாடு செய்யவும். இது உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும், நேர்மறையான சூழலையும் கொண்டு வரும்.
துலாம் ராசி
![]()
துலாம் ராசியில் சேர்ந்த நண்பர்களுக்கு இந்த நவராத்திரி பண்டிகையின் போது வெள்ளை, கிரீம் அதாவது வெளியே மஞ்சள் கலந்த வெள்ளை, இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திருநாளின் போது மேலே குறிப்பிட்ட வண்ண ஆடைகளை அணிந்து, துர்கா தேவிக்கு கற்கண்டு அல்லது பால் இனிப்பு பொருட்களை நிவேதனமாக படைக்கவும். இது உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.
விருச்சிக ராசி
![]()
விருச்சிக ராசி சேர்ந்த நண்பர்களுக்கு, இந்த நவராத்திரி பண்டிகையின் பொழுது, பூஜை மற்றும் துர்கா தேவி வழிபடக்கூடிய நேரத்தில் சிவப்பு அல்லது அடர் சிவப்பு அதாவது மெர்நீரை ஆடைகளை அணிவது நன்மை தரும். மேலும் அம்மனுக்கு வெல்லம் கலந்த இனிப்பு வகைகளை படைத்து வழிபடவும். இது உங்கள் மனதில் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நீக்கும். உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
தனுசு ராசி
![]()
தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த நவராத்திரி அற்புத காலத்தில் அம்மன் வழிபாட்டின் போது மஞ்சள் மற்றும் காவி நிறத்திலான ஆடைகளை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆடைகளை அணிந்து கடலை மாவு அல்லது வாழைப்பழத்தில் செய்த அல்வா போன்ற இனிப்புகளை படைத்த வழிபாடு செய்யவும். இது உங்களுக்கு நேர்மறையான சிந்தனையை தரும்.
மகர ராசி
![]()
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த நவராத்திரி அற்புத நாட்களில் நீலம் அல்லது அடர் நீல நிற ஆடைகளை அணிவது மிகவும் சிறப்பானது. மேலும் இந்த நாட்களில் இந்த நிற ஆடைகளை அணிந்து கொண்டு, துர்க்கை அம்மனுக்கு உலர்க்களங்கள் அல்லது எள் கலந்த லட்டு நிவேதனமாக படைப்பது உண்மை தரும். மேலும் உங்களோடு கவன சிதறல் குறையும். அவருடைய செயல்களில் ஒருமுகத்தன்மை அதிகரிக்கும். வேலையில் இருந்த தடைகள் விலகும்.
கும்ப ராசி
![]()
கும்ப ராசி நண்பர்களுக்கு நவராத்திரி நன்னாளில் நீளம் மற்றும் ஊத நிற ஆடைகளை அணிவது உத்தமம். இந்த வண்ண ஆடைகளை அணிந்து துர்கா தேவி வழிபாடு செய்வதும், அவருக்கு கருப்பட்டி சேர்த்து செய்த இனிப்பு வகைகளை நிவேதனமாக படைத்து வெற்றியுடன் வழிபாடு செய்வது உங்களுடைய மனதில் நேர்மறையான ஆற்றலையும், மன உறுதியையும் பெற உதவும்.
மீன ராசி
![]()
மீன ராசியில் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு நவராத்திரி காலத்தில் மஞ்சள் மற்றும் தங்க நிற ஆடைகளை அணிவது உகந்தது. இந்த நேரத்தில் ஆடையை அணிந்து வழிபாடு செய்வதோடு, கடலை மாவினால் செய்த லட்டு, இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய செல்வ நிலை அதிகரிக்கும். வீட்டில் சுபிட்சம் உண்டாகும். உங்களுடைய இல்லத்தில் நேர்மறையான சூழல் உருவாகும்.