இன்றைய ராசி பலன் 23 அக்டோபர் 2026
மேஷம் ராசி பலன்
![]()
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள், வியாபாரம் தொடர்பாக நினைத்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இன்று குடும்ப விவகாரங்களிலும், வேலை தொடர்பாகவும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். வேலையில் உங்களுடைய திறமையை நிறுவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும், அதில் கவனக் குறைவாக இருப்பதை தவிர்க்கவும். இன்று உங்களுடைய வரவு செலவுகளை கவனிக்க வேண்டிய நாள்.
ரிஷபம் ராசி பலன்
![]()
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகத்தில் இன்று உங்களுடைய கடின உழைப்பிற்கான அங்கீகாரமும், மேலதிகாரியிடம் இருந்து பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள். இன்று உங்கள் செயல்பாடுகள் மற்றும் அதற்கான பல நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். பணியிடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்கள் உறவுகளில் நேர்மையையும், நம்பிக்கையையும் கடைபிடிக்கவும். மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும்.மேலும் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்.
மிதுனம் ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தெய்வபக்தி அதிகரிக்கும். எதிர்பாராத சில நன்மைகள் தேடி வரும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்க பெறுவீர்கள். இன்று உங்களுடைய திட்டமிடல் மற்றும், வேலை தொடர்பான விஷயங்களை கூட கவனமாக செய்யவும். செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது முக்கியம். உறவுகள் தொடர்பாக அதிகமாக சிந்திப்பதோடு, தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வயிறு வலி போன்ற ஆரோக்கியத்தில் சிரமங்களில் ஏற்படலாம்.
கடகம் ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சு செயல்பாடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று தெய்வ பக்தியுடன் இருப்பதும், பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறுவதும் நன்மை தரும். இன்று சில முக்கிய வேலைகளை செய்து முடிப்பதிலும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் புதிய யோசனைகள் தேவைப்படும். புதிய முதலீடு செய்வது அல்லது கடன் கொடுப்பது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் இன்று உங்களுக்கு தொந்தரவு தரக்கூடியதாக அமையலாம்.
சிம்மம் ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். கடினமாக உழைக்க வேண்டிய நாள். பணியிடத்தில் அழுத்தங்களை சந்திப்பீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்கும். அதனால் அதற்கான திட்டமிடல் அவசியம். இன்று உங்களுடைய உடல் நலனில் கவனம் தேவைப்படும். இன்று நண்பர்கள் அல்லது உறவினர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட முடியும்.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பழைய கடனை குறைக்க முடியும். இன்று எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். செயல்பாடுகளை நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நெருக்கமும் நிறைந்ததாக இருக்கும். கடந்த காலம் முயற்சிகள் மற்றும் முதலீடுகள் மூலம் லாபத்தை அடைவீர். ஆரோக்கியம் சாதகமாகவும், அதனால் உங்கள் செயல்களில் உற்சாகமும் நிறைந்திருக்கும்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பூர்விக சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டிய நாள். உங்கள் வேலை மற்றும் குடும்பத்திற்காக நேரம் செலவிடுவதில் சமநிலையை பராமரிக்கவும். உங்களுடைய வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் புத்திசாலித்தனமான முடிவு தேவைப்படும். உத்தியோகம் செய்யக்கூடியவர்களுக்கு உங்களுடைய வேலை மற்றும் முடிவுகளை தள்ளிப் போட வேண்டாம். இன்று சில விஷயங்களை மன அழுத்தத்தை உணர்வீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி, வாகனத்தை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். இன்று வீண் விவாதங்களை தவிர்க்கவும். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய நாள். நிதி நிலை வலுவடையும். அதன் மூலம் உங்களுடைய சேமிப்பை அதிகரிக்க முயற்சி செய்யவும். காதல் உறவிலே இனிமை நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் துணையின் ஆதரவு பெறுவீர்கள். உணவு விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சகோதரர்களின் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இன்று உன் மகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்காகவும், தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும் அதிகம் சிந்திப்பீர்கள். உங்களுடைய நிதிநிலை ஸ்திரத் தன்மையுடன் இருக்கும். உங்களுடைய ஆரோக்கியம் சிறிதாக இருக்கும். சிறப்பாக இருக்கும். அதே சமயம் சிலர் தூக்கமின்மை பிரச்சனையால் அமைதிப்பட வாய்ப்பு உண்டு.
மகரம் ராசி பலன்
![]()
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நம்மை கிடைக்கும். உங்களுடைய நேர்மறையான பேச்சால் காரியம் கைகூடும். குடும்ப பொறுப்புகள் மற்றும் வேலை தொடர்பாக ஒவ்வொரு விஷயங்களிலும் கவனமாக உங்கள் அடியை எடுத்து வைக்கவும். சிறிய விஷயங்களுக்காக உங்கள் உறவில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். அதனால் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டும். தொடர்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று உடல் மற்றும் மனதளவில் சோர்வாக உணருவீர்கள்.
கும்பம் ராசி பலன்
![]()
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சிறிய குழப்பமான சூழல் வந்து செல்லும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். உங்கள் செயல்பாடுகளில் நிதானமும், விவேகமும் தேவைப்படும். அலுவலக பணிகளை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் இனிய பேச்சின் காரணமாக உறவில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால திட்டங்கள் குறித்தும், சேமிப்புகள் குறித்தும் விவாதிக்க வேண்டிய நாள். உணவு விஷயத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
மீனம் ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். பல நாள் உடல் அளவில் சோர்வாக உணர்வீர்கள். நீங்கள் மேற்கொள்ள கூடிய பயணங்களை கவனமாக செய்யவும். உங்களுடைய குடும்பத்திலும், பணியிடத்திலும் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையை முடிக்க நல்ல நேரம் உழைக்க வேண்டியது இருக்கும். இதனால் உங்களுடைய உடல் மற்றும் மனதளவில் சோர்வு அடைவீர்கள். இன்று நிதி நிலை சீராக இருக்கும் என்றாலும், தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். இன்று குடும்பத்தினருடன் இனிமையாக பேசுவதும், அவர்களின் ஆதரவு பெறுவதும் உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும்.