இன்றைய ராசி பலன் 24 அக்டோபர் 2026
மேஷம் ராசி பலன்
![]()
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலையான பலன்கள் கிடைக்க கூடியதாக இருக்கும். பண வரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் எதிர்பாராத அல்லது விரும்பாத வேலைகளை செய்ய நேரிடலாம். வேலை, தொழில் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. கடந்த கால பிரச்சனைக்கு தற்பொழுது மன அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. உங்கள் காதல் துணையுடன் நேரம் சொல்லிவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலை, முதலீடு தொடர்பாக சிந்தனை மேம்படும்.
ரிஷபம் ராசி பலன்
![]()
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தன நிலையில் சிறப்பாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பது சாதகமான பலனைத் தரும். உங்களின் தொழிலை விரிவுபடுத்துவது தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளை, போட்டியாளர்களை வெல்வதற்கான சூழலும், செல்வாக்கும் அதிகரிக்கும். உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையக்கூடிய நாள். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்திலும், சண்டை தகராறுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் உங்கள் வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும்.
மிதுனம் ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று புதன் மற்றும் சுக்கிரனின் அமைப்பு உங்களுக்கு சாதகமான பலனை தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் முன்னெடுக்கக்கூடிய வேலைகள் சரியாக செய்து முடிக்க முடியும். நிதி நிலை சீராக இருக்கும். கடினமான சூழ்நிலை தாண்டி லாபம் ஈட்ட முடியும். அரசு மூலம் நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கலாம். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரம் செய்யக்கூடிய அவர்களுக்கு இருக்கக்கூடிய தடைகள் விலகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு காரணமாக வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம் ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலமையான பலன் கிடைக்கக்கூடிய நாள். உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உங்களுடைய மேலாண்மை திறன் அதிகரிக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படக்கூடிய நாள். குழுவாக வேலையை செய்தல் பலன் அடைவீர்கள். குடும்ப விஷயங்கள் தொடர்பாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தலாம். சரியான விஷயங்களுக்காக பணம் மற்றும் நேரம் செலவிட முயற்சி செய்யவும். சோர்வு நீங்க கூடியதாகவும், தடைகள் விலகக் கூடியதாக இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செயல்களில் தாமதம் ஏற்படலாம். அதனால் இன்று காலை முதலே இங்கு முக்கிய வேலை தொடர்பான திட்டமிடல் கை கொடுக்கும். தொழில்நுட்ப சிக்கல்கள் சிரமங்களை தரலாம். மின்சாதன பொருட்கள், நெருப்பு தொடர்பான வேலைகளில் எச்சரிக்கையுடன் செயல்படவும். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருக்க கூடிய நிலையில் எதிலும், பொறுமையும் கவனமும் தேவைப்படும். வேகமாக பணம் சம்பாதிக்கும் முயற்சியில், தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம். இன்று குடும்பத்தில் அல்லது உறவினர்களால் சில மன அழுத்தம், செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, தொழில் என எதிலும் கூட்டணி செயல்பாடுகள் நல்ல பலனைத் தரும். அதற்கான வாய்ப்புகளும் அமையும். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத மூலங்களிலிருந்து ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை காண்பீர்கள். காதல் விஷயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இன்று குடும்ப பொறுப்புகளை சரியான விதத்தில் நிறைவேற்ற முடியும். பரிசு அல்லது கௌரவம் கிடைக்கலாம்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் உள்ள கிரகங்களும் அதனால் ஏற்படக்கூடிய யோகங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் எதிர்பாரினத்தவர்கள் மூலம் பலன் தரக்கூடிய ஆதரவு கிடைக்கும். கலை துறையில் உங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அனுபவம் வாய்ந்த நபர்கள் அல்லது மூத்த நபர்களிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கும். செல்வாக்கு உயரக்கூடியதாகவும், நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் சுப பலன் கிடைக்கும். வெளிநாட்டு மூலங்களில் இருந்து உங்களுக்கு நன்மை கிடைக்கும். புதிய விஷயங்களை கற்பது, படிப்பு தொடர்பான ஆர்வம் ஏற்படும். குடும்ப உறவுகளே சந்தித்து மகிழ்வீர்கள்.உங்கள் குழந்தைகள் மூலம் சில நல்ல செய்தி தேடி வரும். எதிர்பாராத பொருள் சேர்க்கை ஏற்படலாம். இன்று பொன் பொருள் மீது ஆசை அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். இன்று உங்கள் உறவுகளையும், பணியிட நண்பர்களையும் அனுசரித்து செல்லவும். உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். மனக்குழப்பங்கள் தொந்தரவு தரலாம். உங்களின் சமூக வட்டாரம் விரிவடைய வாய்ப்புகள் உண்டு. வேலை, குடும்ப பொறுப்புகள் என சில கடினமான சூழ்நிலை இருந்தாலும் மன தைரியத்தையும் நிதானத்தையும் கைவிட வேண்டாம். இன்று உங்கள் வீட்டில் அல்லது உறவினர்களின் மங்களகரமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
மகரம் ராசி பலன்
![]()
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தவும். இன்று புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். அதே சமயம் அவசர முடிவு எடுப்பது, உங்கள் பொறுமையை இழக்கவோ வேண்டாம். குடும்ப விவகாரங்களில் பிறரின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட முறையில் வேலை செய்வது நன்மை தரும். இன்று நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்களை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. திருமணம் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்
கும்பம் ராசி பலன்
![]()
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் தொடக்கத்திலிருந்து வேலையில் சற்று மந்தமாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்ப தொழில் செய்யக்கூடியவர்களுக்கு உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால் மன உளைச்சல் ஏற்படலாம். குடுபத்தினரையும், உறவினர்களையும் அனுசரித்து செல்லவும். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதில் சில செலவுகள் அதிகரிக்கலாம்.
மீனம் ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய நாள். இன்று உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். நீங்கள் செய்யக்கூடிய வேலை, கல்வி தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையிலும், பணியிடத்திலும் உங்களுடைய பேச்சை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படுவதால் சூழலை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். நண்பர்கள், உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். காதல் உறவு வலுவடையும்.