ரூ. 62 மில்லியன் செலவில் கட்டுகஸ்தோட்டை நிலக்கீழ் நடைபாதை மக்கள் பயன்பாட்டிற்கு!
- 5,000 பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வசதி
கட்டுகஸ்தோட்டை பகுதியில் ரூ. 62 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, இடைநடுவில் கைவிடப்பட்டிருந்த நிலக்கீழ் நடைபாதை இன்று (29) மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலக்கீழ் நடைபாதை வசதியின் ஊடாக, ஸ்ரீ சந்தானந்த பௌத்த கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயிலும் சுமார் 5,000 மாணவர்கள் வீதியைக் கடக்கும்போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
அத்துடன், அப்பகுதி மக்களும் தமது அன்றாடப் பயணங்களை மேலும் பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் இதன் மூலம் ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




