அந்தமான் கடற்பரப்பில் உருவாகும் வளிமண்டல தளம்பல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அந்தமான் கடற்பரப்பில் உருவாகும் வளிமண்டல தளம்பல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு அருகில், வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அண்மையில், இன்று (29) முதல் வளிமண்டல தளம்பல் ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்படக்கூடிய கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அடுத்துவரும் மணிநேரங்களில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளைக் கூர்ந்து கவனிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் 

இந்த எச்சரிக்கை இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது அடுத்த 24 மணிநேரத்திற்குச் செல்லுபடியாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தமான் கடற்பரப்பில் உருவாகும் வளிமண்டல தளம்பல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Possible Atmospheric Disturbance Near Andaman Sea

இந்த வானிலை அமைப்பு உருவாகி வரும் நிலையில், வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வப்போது வழங்கும் மேலதிக அறிவிப்புகளைக் கவனமாகக் கவனிக்குமாறும் கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery