தாயை சிறைக்கு அனுப்பி வைத்த விமலின் மகள் : சாதாரண கைதிகளுடன் அடைக்கப்பட்ட சஷி

தாயை சிறைக்கு அனுப்பி வைத்த விமலின் மகள் : சாதாரண கைதிகளுடன் அடைக்கப்பட்ட சஷி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைத் தீர்ப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று(18.11.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சஷி வீரவன்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இரண்டு பிள்ளைகளின் தாயான தனது கட்சிக்காரரை  சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.

தாயை சிறைக்கு அனுப்பிய மகள்

இருந்தபோதிலும், மனுதாரரின் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் அவர்களின் தாயான சந்தேகநபரின் பிறந்த திகதி வேறுபட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.

 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை என முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெண் கைதிகள்

நேற்று இரவு குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட அவர், முதலில் கைதியாக பதிவு செய்யப்பட்டார். அத்துடன், பெண் கைதிகளுக்கு வழங்கப்படும் வெள்ளை நிறச் சேலை மற்றும் சட்டை ஆகியன சஷி வீரவன்சவுக்கும் வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம்

கூறியுள்ளது.

தாயை சிறைக்கு அனுப்பி வைத்த விமலின் மகள் : சாதாரண கைதிகளுடன் அடைக்கப்பட்ட சஷி | Wimal S Daughter Send Off Her Mother

அதனை தொடர்ந்து, ஏனைய பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பிரிவில் சஷி வீரவன்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சஷி வீரவன்ச சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், அருகில் நின்றிருந்த அவரது மகள் அவருக்குக் கையசைத்து விடைகொடுத்துள்ளார். அத்துடன், தூரத்திலிருந்தவாறு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட காட்சி காணொளியாக பதிவாகியுள்ளது.