தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்; இன்னும் பல சலுகைகள்; முதலமைச்சர் விஜய் !
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்த வீடுகளை இன்று திறந்து வைத்தார்.
இதனுடன், முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையும் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன்
இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன் காத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் மாதாந்திரப் பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்குதல்
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொண்டு. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திரப் பணக்கொடையை, குடும்பத் தலைவருக்கு ரூ.1,500லிருந்து ரூ.1,800ஆகவும், குடும்ப உறுப்பினர்களாகவுள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.1,200ஆகவும் உய்ரத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500லிருந்து ரூ.600ஆகவும் உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை ஆண்டொன்றுக்கு 14 கோடியே 95 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினத்தில், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று குடும்பங்களைச் சேர்ந்த 4 16 பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார்.