தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

திலீபன் எனும் பார்த்திபன் ராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்திலும் உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து

 

திலீபன் எனும் பார்த்திபன் ராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்திலும் உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தவர்.

இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம். 1987 செப்டம்பர் 15-ம் தேதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

 


1987-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1907 - நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின. * 1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். * 1934 – ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. * 1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது. * 1950 - ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர். * 1950 - இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது. * 1954 - ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர். * 1960 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்றது. * 1960 - பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார். * 1962 - யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1973 – அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்டியது. * 1983 – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார். * 1984 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது. * 1987 - தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார். * 1997 - இந்தோனேசிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர். * 1997 – இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்த்யது. * 2002 - செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். * 2007 - வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். * 2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.