
வெளிநாடுகளில் தங்கியிருந்த 420 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாட்டில் தங்கியிருந்த 420 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இதனடிப்படையில் ஜேர்மனியிலிருந்து 267 பேர், ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திலிருந்து 48 பேர் மற்றும் கட்டார் இராச்சியத்திலிருந்து 57 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவித்தார்.
இதேவேளை நாட்டிலிருந்து மேலும் 126 பேர் கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தை நோக்கி பயணமாகியுள்ளனர்.