சுகாதார வழிமுறைகளுக்குற்பட்டு வழிபாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

சுகாதார வழிமுறைகளுக்குற்பட்டு வழிபாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நத்தார் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

இந்தமுறை உலகெங்கிலும் வியாபித்துள்ள கொவிட் 19 நோய்ப்பரவல் காரணமாக, குறைந்த மக்கள் தொகையுடன் ஆராதனைக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளைஇ இலங்கையிலும்இ தனிமைப்படுத்தப்படாத இடங்களில் உள்ள தேவாலயங்களில் 50 பேருக்கு மேற்படாத பக்தர்களுடன் ஆராதனைகள் இடம்பெற்றன.

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் கட்டம் கட்டமாக தேவ ஆராதனைகள் நடைபெற்றிருந்தன.

புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் மக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற வழிபாடுகள் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நிலைமை கருதி சுகாதார வழிமுறைகளுக்குற்பட்டு வழிபாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.