
இன்றைய ராசி பலன்கள் 03/01/2021
மேஷம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். எதிர்பாராத தனவரவு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்
குடும்பச் சுமை கூடும் நாள். குழப்பங்கள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கையிருப்புகள் கரைய நேரிடலாம். பணிகளில் தடை, தாமதங்களும் ஏற்படும்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கடகம்
புதியவர்களின் நட்பு கிடைக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். சொந்தபந்தங்களின் சந்திப்பு கிட்டும். வியாபாரப் போட்டிகள் அகலும்.
சிம்மம்
யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். இதைச் செய்வோமா? அதைச்செய்வோமா? என்ற குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கொஞ்சம் தாமதமும் உருவாகும்.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். தனவரவு திருப்திதரும். வருங்காலக் கனவுகளை நனவாக்க பயணமொன்றை மேற்கொள்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
துலாம்
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகளின் பகை அகலும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
விருச்சகம்
சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
மங்கலச் செய்திகள் மனைதேடி வந்து சேரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். புதியவர்களின் சந்திப்பு கிட்டும்.
மகரம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் உறுதியாகலாம். சகோதர வழியில் விரயங்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
வருமானம் திருப்தி தரும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மீனம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். பக்குவமாகப்பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் சந்திப்பு கிட்டும். பிள்ளைகளால் விரயம் உண்டு.