நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நார்வே நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும், மாயமான 3 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான நாடு நார்வே. இந்நாட்டில் பனிப்பொழிவு மிகவும் அதிக அளவில் இருக்கும்.

 


இதற்கிடையில், நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்த ஆக்ஸ் கிராமத்தில் கடந்த 31-ம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால், வீடுகளில் இருந்த பலரும் மண்ணுக்குள் புதைந்து மாயமாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் நிலச்சரினால் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுப்ட்டனர். மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

நிலச்சரிவால் சிறு காயங்களுடன் வீடுகளில் சிக்கிக்கொண்டவர்களில் 10-க்கும் அதிகமானோரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். ஆனால், 10 பேர் மண்ணுக்குள் புதைந்ததால் அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதுவரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேரின் நிலைமை என்ன ஆனது என தெரியாததால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆனதால் எஞ்சிய 3 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் மிகக்குறைவு என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Search continues for survivors after major Norway landslide

Norway landslide: rescuers continue their search for survivors days after  tragedy struck - CNN