விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சுண்ணாம்புக்கல் அகழ்வை தடை செய்யுமாறு பாிந்துரை!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சுண்ணாம்புக்கல் அகழ்வை தடை செய்யுமாறு பாிந்துரை!

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணையில் இருந்து 100 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் சுண்ணாம்புக்கல் அகழ்வை தடை செய்யுமாறு நில அதிர்வை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி மாவட்டத்தில் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மித்த பகுதிகளில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வினை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இதுவரை ஏற்பட்டுள்ள நில அதிர்வுகள் அனைத்தும் இரண்டிற்கு குறைந்த ரிச்டர் அளவிலே பதிவாகியுள்ளன.

எனவே அவை நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பும் போது நிகழும் இயற்கையான நில அதிர்வு என நிபுணர் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது