புத்தாண்டில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம்

புத்தாண்டில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம்

மாவனெல்ல - தனகம பகுதியில் இன்று (01) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம் | New Year Horror Unfolds In Sri Lankaஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.