ஏன் இப்படி? பிக்பாஸ் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

ஏன் இப்படி? பிக்பாஸ் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனில் மிகப்பெரிய புகழ் பெற்றார் என்பதும் அவருக்கு சமூக வலைதளங்களில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பதும் தெரிந்ததே. இதன் காரணமாக அவர் தற்போது தமிழ் திரையுலகில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைதளங்களில் லாஸ்லியா ஆக்டிவாக இருந்த நிலையில் திடீரென அவரது தந்தையின் மறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் காணாமல் இருந்தார்

இதனை அடுத்து இம் மாதம் மூன்றாம் தேதி அவர் மீண்டும் சமூக வலைதளங்களில் எண்ட்ரி ஆகி தனது இன்ஸ்டாவில் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டார் என்பதும், இந்த புகைப்படம் இந்திய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே. அதன் பின் பொங்கல் தினத்தில் பாவாடை தாவணியில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் தந்தை மறைவின் சோகத்தில் இருந்து மீண்டு விட்டதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டு இருந்தார்

இந்த நிலையில் தற்போது அவர் லாஸ்லியா மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். சற்றே கவர்ச்சியுடன் கூடிய இந்த புகைப்படம் பார்ப்பதற்கு சூப்பராக இருந்தாலும் அவரது முகம் சோகமாக இருப்பதை பார்த்து ’லாஸ்லியா ஏன் இப்படி? இன்னும் தந்தையின் சோகத்தில் இருந்து மீண்டு வர வில்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படமும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது