இலங்கையில் சிக்கிய புதிய வகையான போதைப் பொருள்!

இலங்கையில் சிக்கிய புதிய வகையான போதைப் பொருள்!

புதிய வகையான போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் மஹரகம பகுதியில் வைத்த கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரெவ்வல பகுதியில் நேற்று மாலை திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளர்.

பன்னிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து ஒரு கிலோ ஐந்து கிராம் டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனப்படும் ஏஷ் ஒயில் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 35 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இந்த போதைப்பொருட்களை ஏற்றி வந்த காரை பறிமுதல் செய்துள்ள திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.