
தந்தை பாணியில் ஆரியின் மகள் கூறிய நன்றி... வேற லெவல் காணொளி! குஷியில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக அவர் விவசாயம் குறித்து பெருமை உரிய விஷயங்களை தெரிவித்து வருகிறார் என்பதும், அவரது அறிவுரையின்படி தான் பாலாஜியே விவசாயம் செய்யவிருப்பதாக அறிவித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த 5ம் திகதி ஆரியின் மகள் ரியாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஆரி, விதைகளை பரிசாக கொடுத்திருந்தார். அந்த விதைகளை ஆரியின் மகள் விதைக்கும் புகைப்படத்தையும் ஆரி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தற்போது தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு ரியா நன்றி கூறியதோடு, அப்பா பாணியில் கைகளை வைத்து சல்யூட் அளித்துள்ள காணொளியினை ஆரி பகிர்ந்துள்ளார்.