
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக எண்ட்ரியான அர்ச்சனா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் அதிக வெறுப்பினை சம்பாதித்தவர் தான் அர்ச்சனா.
ஜீ தமிழில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தற்போது பிக்பாஸ் ஒளிபரப்பான ரிவியில் தொகுப்பாளினியாக வந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் ‘காதலே காதலே’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறி உள்ளார் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
ஆம் இந்நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பழைய சேனலில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் பார்த்த வேலையை விட்டுவிட்ட பின்னரே பிக்பாஸில் கலந்து கொண்டார். ஆனாலும் பிரபல ரிவியில் பெரிய தொகை வாங்கிய பின்பே பிக்பாஸிற்குள் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் நிரந்திர தொகுப்பாளரா இல்லை தற்போது மட்டும் தொகுப்பாளராக பணியாற்றுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.