
20 ஆண்டிற்குப் பின்பு அம்பலமான உண்மைகள் ! பிரபுவை 5 ஆண்டுகளாக காதலித்த குஷ்பு…
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் காதல் வயப்படுவது நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் காதலிக்கும் நடிகர் நடிகைகள் அவர்களையே தான் திருமணம் செய்து கொண்டு நட்சத்திர ஜோடியாக வலம்வருபவர்கள் ஒரு சிலரே.
சிலரோ காதல் கைகூடாமல் பிரிந்து விடுவதும் உண்டு. இவ்வாறு நடிகை குஷ்பு பிரபுவைக் காதலித்தது குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில், வீட்டில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் பிரிந்துவிட்டனர்.
இவர்களின் ஜோடியைப் பார்த்து சினிமா உலகமே பொறாமை படும் அளவிற்கு இவர்களது கெமிஸ்ட்ரி இருந்துள்ளது.
குஷ்பு பிரபு இடையேயான காதலை பற்றி 20 வருடங்கள் கழித்து குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.
அது ஒரு அழகான காலம், எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத இனிமையான இளமை காலம் என்று கூறியுள்ள அவர், எங்கள் காதல் முழுமையடையாமல் போனது துரதிஷ்டமானது
எங்கள் காதல் பிரிய என்ன காரணம் என்பதைக் கூறி பிரபுவுக்கும், அவருடைய குடும்பத்துக்கும் சங்கடத்தில் ஆழ்த்த எனக்கு விருப்பம் இல்லை. அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. இருவரும் அவரவர் குடும்பங்களாக இருந்து வருகின்றோம்.
மேலும் தன்னுடைய வாழ்க்கையை சுந்தர்.சி அழகாக மாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். பிரபுவுடனான காதல் பற்றி குஷ்பு இவ்வாறு கூறியிருப்பது அவர் இன்னும் பிரபுவை மறக்கவில்லையா என்ற கேள்வியினை எழுப்பியுள்ளது.