காதலர் தினத்தில் விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்! புடவையில் கொள்ளை அழகுடன் ஜொலித்த நயன்... மில்லியன் கணக்கில் குவியும் லைக்குகள்

காதலர் தினத்தில் விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்! புடவையில் கொள்ளை அழகுடன் ஜொலித்த நயன்... மில்லியன் கணக்கில் குவியும் லைக்குகள்

நடிகை நயன்தாராவுடன் பாரம்பரிய உடையில் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

அதில், “Love.. being in love with you #Thangamey” என்று பதிவிட்டுள்ளார்.

அண்மைக் காலமாகவே நயன் தாராவை விக்னேஷ் சிவன் தங்கமே என்றழைத்து தம் அன்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

இதனை பார்த்த மில்லியன் கணக்கான ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, நானும் ரௌடி தான் படத்தின் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே உறவு மலர்ந்தது.

 

இருவரும் தத்தம் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரும் செய்திகளும், எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவதுண்டு.

இதனிடையே ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

ஓடிடி திரைப்படமான பாவக்கதைகளில் ஒரு பகுதியை இயக்கிய, விக்னேஷ் சிவன் தனது புதிய படமான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட பணிகளில் மும்முரமாக இருந்துவரும் நிலையில் அப்படத்தின் ‘ரெண்டு காதல்’ என்கிற முதல் சிங்கிள் டிராக் பாடல் காதலர் தினமாம் பிப்ரவரி 14-ஆம் திகதி வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.