
காதலர் தினத்திற்கு மைனா நந்தினிக்கு கணவர் லோகேஷ் கொடுத்த எமோஷ்னல் பரிசு... ஜோடியாக கண்ணீர் விட்டு அழுத காட்சி
காதலர் தினத்தன்று நடிகை மைனா நந்தினிக்கு அவரது கணவர் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளார்.
பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை நந்தினி.
குறித்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் இவரை திரையுலகிலும் ரசிகர்களும் மைனா நந்தினி என்றே அழைத்து வருகின்றனர்.
ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவருக்கும் சீரியல் நடிகர் யோகேஸ்வரனுக்கும் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு துருவன் என்று பெயரிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
சமூகவலைதளத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் மைனா நந்தினி தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார்.
‘மைனா விங்ஸ்’ என்ற அந்த சேனலில் ரோட் ட்ரிப், மேக்கப், சமையல் என பல சுவாரஸ்யமான வீடியோக்களை நந்தினியும் அவரது கணவரும் இணைந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தனது மனைவிக்கு சர்ப்ரைஸாக காதலர் தின பரிசு கொடுத்ததை வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஆரம்பத்தில் கேக், டெட்டி பியர், துருவன் என பெயர் பொறித்த டாலர் என வரிசையாக நந்தினிக்கு கிப்ட் கொடுத்த யோகேஸ்வரன் தனது நெஞ்சில் மனைவியின் பெயரை பச்சைக் குத்தியிருப்பதையும் காட்டுகிறார்.
அதைப்பார்த்த மைனா நந்தினி அன்பில் உறைந்து போக யோகேஸ்வரன் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.