இன்று பொசன் பௌர்ணமி தினம்..!
இன்று உலக வாழ் பௌத்தர்கள் அனைவரும் பொசன் தினத்தை கொண்டாடுகின்றனர். வெசக் தினத்தையடுத்து வருவதே பொசன் தினமாகும். இலங்கைக்கு சங்கமித்தை வௌ்ளரச மரக்கிளையுடன் வருகைத் தந்த தினமே பொசன் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதிக பௌத்தர்கள் செறிந்து வாழும் இலங்கையில் மிகவும் பக்திப் பூர்வமாக கொண்டாடப்படும் ஆன்மீகத் தினங்களில் பொசனும் முக்கிய இடத்தை வகிக்கிறது.
பௌத்த சமயத்தின் அடையாளமாக இன்று பாரிய விருட்சமாக வளர்ந்துள்ள சங்கமித்தை கொண்டு வந்த வௌ்ளரசு மரக்கிளை அநுராதபுரத்தின் மகாமேகவண்ண பூங்காவில் நடப்பட்டுள்ளது. ஶ்ரீ மாபோதி என்றழைக்கப்படும் இவ்வௌ்ளரசு விருட்சத்தில் பொசன் தினத்தில் விசேட சமய நிகழ்வுகள் நடைபெறும்.
இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது. பிக்குனியான சங்கமித்தை கொண்டு வந்த அம்மரக்கிளையை தேவ நம்பிய தீசன் நட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025