
கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் 70% இனால் குறைவடைந்துள்ளது
ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் குறைவடைந்து காணப்பட்டதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 70 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக இவ்வாறு டெங்கு பரவல் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 31,084 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதோடு 2019 ஆம் ஆண்டு 105,049 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,362 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் அதிகமானோர் மட்டகளப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 111 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்