
கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்! (படங்கள்)
கலைமாமணி விருது பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன், அவ்விருதை தனது தாயக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
தான் பெற்ற விருதை தாயின் கைகளில் ஒப்படைத்து அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
அப் பதிவில் அவர், “சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்“ எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிவகார்த்திகேயன், யோகிபாபு உட்பட 134 கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்தார்.