
இதெல்லாம் பாக்க என் பொண்ணு கூட இல்லை.. மறைந்த சித்ராவை பற்றி உருக்கமாக பேசிய தாய்!
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படம் வருகிற பிப்ரவரி 26-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
ஏற்கனவே, ட்ரைலர் வெளியாகி 2 மில்லியன் வியூஸைத் தாண்டிச் சென்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சித்ராவின் தாயார் பேசுகையில், "உயிரோட இருந்தாலும் உயிர் இல்லாத மாதிரிதான் உணர்றோம்.
எம்பொண்ணு எங்களை விட்டுப்போயி மூணு மாசம் ஆகப்போகுது. ஆனா, தினமும் அவளை நினைச்சி நினைச்சி அழாத நாளில்லை.
அவ நினைவுகள்ல இருந்து மீண்டு வரமுடிவில்லை... வரவும் முடியாது. அவ்ளோ பாசமான பொண்ணு.
மேலும், எங்களை ஏண்டி விட்டுட்டுப் போனன்னு கேட்டு அழுவறதா? அன்னைக்கு நைட்டு ஹோட்டல்ல என்னடி நடந்ததுன்னு கேக்குறதா? ஏண்டி இந்த மாதிரி ஒருத்தரை தேர்ந்தெடுத்தனு அவக்கிட்ட கேக்கணும்னு தோணுது.
சாப்பிடவே பிடிக்க மாட்டுது. நானும் அவ அப்பாவும் தினமும் ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சிட்டு கிடக்குறோம்.
சித்ரா குழந்தையில் இருந்தே ரொம்பவே ஆக்டிவ், தைரியமான பொண்ணு, அதனால தான், அவளோட ரெண்டரை வயசுலேயே ஸ்கூலில் சேர்த்துட்டோம்.