நடிகைகளின் திருமண வாழ்க்கை! இந்த விசயத்துல இவங்களுக்குள்ள இப்படி ஒரு ஒற்றுமையா?

நடிகைகளின் திருமண வாழ்க்கை! இந்த விசயத்துல இவங்களுக்குள்ள இப்படி ஒரு ஒற்றுமையா?

நடிகைகள் திருமணத்திற்கு உடனே ஓகே சொல்வது எளிதல்ல. சினிமாவில் தங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சிலர் திருமணத்தை தள்ளி வைப்பது, சிலர் உடனே ஓகே செய்தும், காதல் திருமணமும், விவாகரத்தும் நிகழ்ந்துள்ளது.

அவ்வகையில் நடிகைகள் யாரெல்லாம் சினிமாவில் இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என பார்க்கலாம்.

சுந்தர் சி - குஷ்பூ :-

1995 ல் சுந்தர் சி இயக்கத்தில் முறை மாமன் படத்தில் நடித்த குஷ்பூ காதல் வயப்பட்டு மார்ச் 2000 ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.

செல்வமணி - ரோஜா:-

1992 ல் வந்த செம்பருத்தில் படத்தில் ரோஜா நடிகையாக இயக்குனர் செல்வமணியால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதிரடி படை, ராஜ முத்திரை, அடிமை சங்கிலி, அரசியல், பொட்டு அம்ம, குற்ற பத்திரிக்கை என பல படங்களில் அவருடன் பணியாற்றிய ரோஜா 2002 ல் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

செல்வராகவன் - சோனியா அகர்வால்:-

செல்வராகவன் இயக்குனராக அறிமுகமான காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்ட ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய இவர்கள் 2006 ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறு பாட்டால் 4 வருடங்களிலேயே பிரிந்து விட்டனர். செல்வராகவன் கீதா என்பவரை திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொண்டார்.

ஏ.எல் விஜய் - அமலா பால்:-

மைனா படத்தின் வெற்றியால் ஏ.எல்.விஜய்யின் தெய்வ திருமகள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமலா பால் மீண்டும் அவருடன் தலைவா படத்தில் சேர்ந்தார். காதல் கொண்ட இவர்கள் கடந்த 2016 ல் திருமணம் செய்த நிலையில் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டனர். பின் விஜய் 2019 ல் டாக்டர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

 

விரைவில் இந்த பட்டியலில் நடிகை நயன் தாரா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.