கனவுல கூட நினைக்காதது இன்று நடந்தது... சனம் ஷெட்டியின் மகிழ்ச்சி

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி தன்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

சனம் ஷெட்டி - கமல்

 

இந்நிலையில், பெண் சக்தி விருதை கமலிடம் இருந்து சனம் ஷெட்டி பெற்றிருக்கிறது. இது குறித்து கூறிய சனம் ஷெட்டி, கனவுல கூட நினைக்காதது இன்று நடந்தது. லெஜெண்ட் கமல் சார் கையால் விருதை வாங்கியது மகிழ்ச்சி. பெண்களின் சக்தியை நாம் கொண்டாடும் நாளில் வழங்கப்படுவது மறக்க முடியாத தருணம்’ என்று கூறியிருக்கிறார்.