
இன்றைய ராசி பலன்கள் 21/3/2021
மேஷம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்
ரிஷபம்
புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும் நாள். வருமானம் உயரும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கூடும்.
மிதுனம்
பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். அதிகாரிகளால் அனுகூலம் உண்டு
கடகம்
வாழ்க்கைத் தரம் உயரும் நாள். வருமானம் எதிர்பார்த்ததை விடக்கூடுதலாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்
சிம்மம்
தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நேற்று பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர்
கன்னி
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்களைச் சந்திக்கும் எண்ணம் உருவாகும். அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றிச் சிந்திப்பீர்கள்
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பூமி வாங்கும் யோகம் உண்டு. ஊா்மாற்றம், இடமாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவோடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்
விருச்சகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. மனதில் இனம்புரியாத கவலை மேலோங்கும்
தனுசு
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள்
மகரம்
எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி காணும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் நல்ல தகவல் வந்து சேரும்
கும்பம்
வருமானம் அதிகரித்து வளர்ச்சி காணும் நாள். வாழ்க்கைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மங்கலச் செய்தியொன்று மனைதேடி வந்து சேரலாம். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.