இன்றைய ராசி பலன்கள் 27/3/2021

இன்றைய ராசி பலன்கள் 27/3/2021

மேஷம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன் சுமை குறையும்

ரிஷபம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே இல்லம் தேடி வருவர்

மிதுனம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தாய்வழி ஆதரவு உண்டு. பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். வருமானம் திருப்தி தரும்.

கடகம்

அலைபேசி வழித் தகவலால் அனுகூலம் கிடைக்கும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

சிம்மம்

உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்

கன்னி

தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறும் நாள். சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் உண்டு. விரயங்கள் அதிகரிக்கும்

துலாம்

வரவு திருப்தி தரும் நாள். நல்வர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். எந்தக் காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.

விருச்சகம்

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்தித்து மகிழும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை காண்பீர்கள்

தனுசு

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். நண்பர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்

மகரம்

மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். திடீர் பயணங்களால் விரயம் உண்டு. வங்கிகளில் உள்ள வைப்பு நிதி கரையும். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.

கும்பம்

யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். தொலைபேசி வழி உரையாடல் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம்.

மீனம்

எதிரிகள் உதிரியாகும் நாள். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்தை கண்டு உறவினர்கள் ஆதங்கப்படுவர். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்