இன்றைய ராசி பலன்கள் 02/04/2021

இன்றைய ராசி பலன்கள் 02/04/2021

மேஷம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வது நல்லது. வியாபார விரோதம் அதிகரிக்கும்

ரிஷபம்

தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்கசமயத்தில் கைகொடுத்து உதவுவர்.உள்ளம் மகிழும் செய்தியொன்றை உறவினர்கள் வழியில் கேட்கலாம்.

மிதுனம்

எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும் நாள். எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு வழிச் சலுகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்

கடகம்

சுபச்செலவுகள் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகள் அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு அனுகூலம் தரும். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அளவோடு பழகுவது நல்லது

சிம்மம்

எதிர்பார்த்த தொகை எளிதில் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். பொன்,பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள்

கன்னி

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.பூர்வீக சொத்துகளால் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்

துலாம்

வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்ளும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பகை மாறும்

விருச்சகம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எந்த முக்கிய முடிவும் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதே நல்லது

தனுசு

யோகமான நாள். உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரும் நாள். உடல்நலம் சீராகும். வருமானம் திருப்தி தரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்

மகரம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூகநலப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

கும்பம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

மீனம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.தொழில் முன்னேற்றம் உண்டு.